கோலாலம்பூர், ஏப். 7-
கோவிட்-19 தொற்றுக்கான அபாயகரமான பகுதிகள் என சிவப்புக் குறீடு வழங்கப்பட்டப் பகுதிகளாக மேலும் 3 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அதன் எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
புத்ராஜெயாவில் 41 சம்பவஙகள், மலாக்கா, ஜாசினில் 42, நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 41 கோவிட்-19 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


