Homeகுற்றவியல்கோவிட் 19 : சிவப்பு வளையத்திற்குள் மஸ்ஜிட் இந்தியா!

கோவிட் 19 : சிவப்பு வளையத்திற்குள் மஸ்ஜிட் இந்தியா!

கோலாலம்பூர், ஏப்ரல் 7-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்சன் ஆகிய கட்டடங்களில் இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை கடுமையாக்கப்படுவதாக தற்காப்புத் துறை முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அவ்விரு கட்ட்டங்களில் 15 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 465 வீடுகளும் வணிகத் தளங்களும் அடங்கும்.

அதோடு நடமட்டாக் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காக நேற்று 403 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதிப்படுத்தினார். கடந்த ஞாயிற்றூக் கிழமையுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை குறைவு என்றார் அவர். தடுத்து வைக்கப்பட்டவர்களுல் 56 பேர் உத்தரவாதத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது வரை நடமட்டாக் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6452 ஆகப் பதிவாகியுள்ளது.

spot_img

latest articles

explore more