Homeகுற்றவியல்மிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

மிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

கோலாலம்பூர், ஏப். 7-

தேசிய மிருகக் காட்சி சாலை 300க்கும் மேற்ப்பட்ட மிருகங்களுக்கு கோவிட்-19 தொற்றாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிருகங்கள் தங்கும் ஒவ்வொரு கொட்டகைக்கும் செல்வதைக் குறைத்து கொள்வதுடன் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவதாக கால்நடை பிரிவு இயக்குநர் டாக்டர் மாட் நைம் ரம்லி தெரிவித்தார்.

மனிதர்களிடமிருந்து மிருகங்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவியிருக்கும் சம்பவம் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more