ஆதவன்
உலக நலவாழ்வு நாள் (world health day) என்பது உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாக முடிவு செய்யப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
2020 ஆண்டுக்கானக் கருபொருளாக “தாதியருக்கும் பேறுகால உதவியாளருக்கும் ஊக்குவிப்போம்” எனும் வாசகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். Support nurses and midwives
இன்றைய நாளில் உலகில் உள்ள அனைவருக்கும் சுகாதரமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென உறுதியேற்று உள்ளது. இதற்காக Health for All என்ற இயக்கத்தையும் முன்னெடுத்து உள்ளது. உலக்கில் உள்ள அனைவரும் அனைவருக்கும் சமமான மருத்துவ முறாஇகள் கிடைக்கச் செய்ய முயற்சிகளை எடுப்பது அவசியமாகிறது.
உடல் நலம் அனைவருக்கும் கிடைக்காத இடைவெளிகளை குறித்த உரையாற்றும் நாள் இது தான். போதிய பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு கூட மருத்துவ சேவை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
முதன்மையான சுகாதார பாதுகாப்பு அனைத்து மக்களையும் சென்றடைவதுதான் இலக்காக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தனி மனிதர்கள் அல்லது சமூகங்கள் அனைத்து மனிதர்களுக்கும் சுகாதார நலனை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
தாதியருக்கும் பேறுகால உதவியாளர்களுக்கும் மரியாதை செலுத்துவோம், பாராட்டுவோம், ஊக்குவிப்போம்


