புத்ராஜெயா, செப் 9-
மலேசியாவில் இன்று கொவிட் 19 கிருமித் தொற்று காரணமாக 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் 18 சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்தது என்றும் 6 சம்பவங்கள் வெளிநாட்டைச் சார்ந்தது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
இதனிடையே இன்று 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த காரணமாக இதுவரையில் இந்த கிருமித் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,583 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 312 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் 7 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியை நாடியுள்ளார். இது 3.26 % ஆகும்
இந்த கிருமித் தொற்றின் காரணமாக மரணச் சம்பவம் நிகழவில்லை. இதனால் மரண எண்ணிக்கை 128ஆக நீடிக்கின்றது. 1.34 விழுக்காடு ஆகும்.
இன்று 7 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,143 ஆக அதிகரித்துள்ளது. இது 95.41% ஆகும்


