கோலாலம்பூர், செப். 24-
மலேசிய மகா சிலம்பம் குத்து வரிசை அமைப்பு, 2020 செப்டம்பர் 26ஆம் தேதி அன்று உலகளாவிய சிலம்பம் நாளை 2ஆவது ஆண்டாகக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் இந்த தற்காப்புக் கலையை விதைத்த நம் முன்னோர்களுக்கு அங்கீகாரம், பாராட்டு மற்றும் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பின் தோற்றுநர் மகாகுரு கௌரவ டாக்டர் எம்.மகாலிங்கம் இந்த வரலாற்று முன்னெடுக்கின்றார்.

அதே நேரத்தில் சிலம்பம் நிபுணர்கள் சிலம்பம் பக்தர்கள் இந்தியப் பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் இந்த வளமான கலாச்சாரத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்துக் கடந்து வந்துள்ளனர். இந்த
இந்த உலக சிலம்பம் தினத்தை ஒன்றிணைத்துக் கொண்டாடுவோம் என மகாகுரு எம் மகாலிங்கம் கேட்டுக் கொண்டார்.

உலக சிலம்பம் நாள் உருவாகிய வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மலேசியா மகா சிலம்பம் குத்து வரிசை சங்கம், தமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் கீழ், இறுதியாகச் செப்டம்பர் 26 ஆம் தேதி உலக சிலம்பம் தினமாக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பு ஆய்வுகள் நடத்தியது.

1975 ஆம் ஆண்டில், மலேசிய நாடாளுமன்றத்தில் அனைத்து தற்காப்புக் கலைகளும் அந்தந்த அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. நாட்டில் சிலம்பத்தை முன்னெடுக்கும் சங்கம் அப்போது இல்லை என்பதை அறிந்த அப்போதைய மலேசிய இந்தியக் காங்கிரசின் இளைஞர் தலைவராக இருந்த டத்தோ `வி.எல். காந்தன் சிலம்பம் சமூக அமைப்பைத் தொடங்கினார்.

இதற்கிடையில், காலம்சென்ற அமைச்சர் தான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் நாடாளுமன்றத்தில் சிலம்பம் குறித்து முன்மொழிந்தார் மற்றும் அப்போது துணை அமைச்சராக இருந்த துன் சாமிவேலு மலேசியப் பதிவேட்டில் இடம்பெறச் செய்ய வழிமொழிந்தார். அப்போதுதான் சிலம்பம் அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றது. செப்டம்பர் 26, 1976 அன்று, மலேசியா சிலம்பம் சமூக அமைப்பு தேசிய சங்கப் பதிவிலாகாவில் பதிவானது.

சிலம்பத்தை ஓர் இந்தியப் பாரம்பரிய தற்காப்புக் கலையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடு மலேசிய அரசாங்கமாகும். இந்த நாட்டில் சிலம்பத்தின் முன்னேற்றத்திற்கான தொடக்கமாக இது இருந்தது. மற்றதெல்லாம் வரலாறு.

தற்போது நாடு முழுவதும் சுமார் இருபது சிலம்பம் சங்கங்கள் உள்ளன, நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மையங்கள் முறையான சிலம்பம் பயிற்சி அளிக்கின்றன. இப்போது சிலம்பம் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது, தமிழ் மொழி சங்கத்தின் குடையின் கீழ் பல்கலைக்கழக மலாயாவில் (1991) சிலம்பத்தை அறிமுகப்படுத்திய நாட்டிலேயே முதன்முதலில் மகாகுரு மகாலிங்கம் இருந்தார், அதன் தலைவராக இளஞ்செழியன் பொறுப்பு வகித்தார்.

1997 ஆம் ஆண்டு முதல், புறப்பாட நடவடிக்கையின் கீழ் சிலம்பத்தை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாகக் கற்பித்தார். இது ஒரு கிராம விளையாட்டிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த நிலையில் சிலம்பத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.