Homeகலை உலகம்ஆஸ்ட்ரோவில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோவில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளி அனல் பறக்குது [சீசன் 2] (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 7-14 நவம்பர், இரவு 8 மணி
பிரபலமான உள்ளூர் திறமைகளைக் கொண்ட செஃப் காஞ்சனா தேவி, செஃப் டாக்டர் தினேஷ் மற்றும் செஃப் ஷீனா ஆகியோருடனான பாரம்பரிய மற்றும் நவீன இந்திய உணவுகளுக்கான சமையல் நிகழ்ச்சி.

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள் !

கண்ணா லட்டு தின்ன ஆசையா  (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ உலகம்  | 7-12 நவம்பர், இரவு 8 மணி

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி லங்காவிக்குச் செல்ல நினைத்த தனேஷின் பயண  முடிவில் பகவான் கிருஷ்ணன் குறுக்கிடவே அவனது பயண  முடிவுகள் பாதிக்கப்படுகின்றன. இவ்வலைத்தளத் தொடர் தனேஷைப் பற்றின ஒரு சோக-நகைச்சுவைக் கதையைச் சித்தறிக்கின்றது.

மணிரத்னம் வந்தாச்சு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 9-13 நவம்பர், இரவு 9.30 மணி

தொற்றுநோய்க் காலகட்டத்திற்குப் பிறகு தனது தந்தையின் சிறிய மளிகைக் கடையை வழிநடத்த கிராமத்திற்குத் திரும்புகிறார் மணி த / பெ ரத்னம். ஒரு உளவியலாளராக, கடையில் இருந்த பழையத் தீபாவளி அட்டைகளைப் பயன்படுத்தி கிராமவாசிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடிவு செய்கிறார்.

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள் !

அதிகாரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480) | 11 நவம்பர்

ஒரு கொலை செய்யப்பட்ட அதிகாரியின் வழக்குகளை வழிநடத்த மற்றொரு காவல்துறை அதிகாரி பொறுப்பேர்க்கிறார். கொலையாளி ஒரு வழக்கோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கிறார். கொலையைப் பார்த்தில் அதிர்ச்சியடைந்த மற்றும் பேச முடியாமல் போன பாதிக்கப்பட்டவரின் மகளின் உதவியுடன் அவ்வதிகாரி ஒரு அரிய நோயையும், நிறைவேற்றுவதற்கான பெரிய திட்டத்தையும் கொண்ட கொலையாளியைக் கண்டுபிடித்தார்.

Varnam MY | The Malaysian Indian Heartbeat

ராகாவின் தீபாவளி கொண்டாட்டம் 2020 
ராகாவின் முகநூல் | 13 நவம்பர், இரவு 8 மணி

பிரபலமான உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட ராகாவின் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை மலேசியர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

தீபாவளி அங்க்பாவ் நேரலை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 14 நவம்பர்

வாடிக்கையாளர்கள் அழைத்து சரியான பதிலை கூறுவதன் மூலம் RM6000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் அறிய வாய்ப்பைப் பெறுவர். ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியுடன் இணைந்திருங்கள்!

பாக்காட்டி போ (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர்

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஜெஸ்ஸியின் வருகையினால்  ஒரு  முக்கோண காதல் தொடங்கும் வரை அஸ்வின் மைதிலியின் பால் காதலினால் அவளை ஈர்க்க முயற்சிக்கிறான்.

மக்களே சும்மா உக்காருங்க (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர், பிற்பகல் 1.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தந்தை, ஜீவானந்தம் மற்றும் மகன் அருண் ஆகியோருக்கு இடையில் தலைமுறை இடைவெளி மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக எழும் தான் எனும் அகங்கார மோதல்களைப் பற்றியக் கதை.

மைந்தன் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர், மதியம் 3 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தேவியின் வாழ்க்கை தலைகீழாக மாறும்போது, ​​ஒரு சிண்டிகேட்டிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவனை அவர் சந்திக்கிறார். சிறுவனின் துன்புறுத்துபவர்களை நீதிக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் ஒன்றாக சேர்கிறார்கள்.

Maindhan (2014 film) - Wikipedia

எம்சிஓ தீபாவளி கொண்டாட்டம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர், மாலை 6 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

வேடிக்கை நிரம்பிய நேர்காணல்கள், விளையாட்டுகள் மற்றும் பல உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட நிகழ்ச்சி.

ஆடி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர், மாலை 6.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தம்பதியினரின் உண்மையான நோக்கங்களையும் ஆளுமையையும் காட்டும் ஒரு மந்திரப் பெட்டியைக் கண்டவுடன் அவர்களின் வாழ்க்கை மாறுகிறது.

அன்புக்கு நான் அடிமை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 14 நவம்பர், மாலை 7.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர், முகேன் ராவ் இத்தீபாவளியை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் விளையாட்டு, கேள்வி பதில் அங்கம், படைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இவ்வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டாடுகிறார்.

ரசிக்க ருசிக்க தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி  (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 14 நவம்பர், இரவு 9 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஷேபி மற்றும் ‘சூப்பர் ஸ்டார் 2018’ இறுதிப் போட்டியாளரான பிரசாத் சிறந்த பிரியாணி உணவகங்களைக் கண்டுபிடிப்பர்தற்காக பயணத்தை மேற்க்கொள்வர்.

மலரும் புன்னகை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 14 நவம்பர், இரவு 9.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

இந்திய இசை ஜாம்பாவான்களான எ. எம். ராஜா, பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், பி.பானுமதி மற்றும் டி. எ.சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) ஆகியோரின் 50 முதல் 70-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்களை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சி.

நரன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 15 நவம்பர், பிற்பகல் 1.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மர்மமான கொலைகளுக்கு வழிவகுக்கும் ஒரு அசாதாரண நோய்க்குறியைச் சித்தறிக்கும் கதை.

வாங்க பழகலாம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 15 நவம்பர், மாலை 7 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவத்துடன் வரலாறு மற்றும் இத்திருநாளின் தனித்துவம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அதையும் தாண்டி புனிதமானது (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) | 15 நவம்பர், இரவு 9 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

யுவா என்ற இளைஞன், ஆதறவற்றோர் இல்லத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட தனது தாத்தாவைக் சந்திக்கிறான். அவருடன் நெருங்கி பழகி அவரின் இறுதி ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறான்.

தீபாவளி பொக்கிஷம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) | 15 நவம்பர், இரவு 9.30 மணி

*ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தீபாவளி தொடர்பான பணிகளுடன் பிரபல உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட தீபாவளி-கருப்பொருளைக் கொண்ட புதையல் வேட்டை. ஒவ்வொரு நிலையத்திலும் பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் குழுக்களுக்கு அடுத்த நிலையத்திற்கு செல்ல துப்பு வழங்கப்படும்.

spot_img

latest articles

explore more