Homeமலேசியாதீபாவளி வியாபாரம் மந்தம; பிரிக்ஃபீல்ட்ஸ் - கிள்ளான் லிட்டில் இந்தியா வியாபாரிகள் பாதிப்பு

தீபாவளி வியாபாரம் மந்தம; பிரிக்ஃபீல்ட்ஸ் – கிள்ளான் லிட்டில் இந்தியா வியாபாரிகள் பாதிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 12:-

பிரிக்ஃபீல்ட்ஸ் – கிள்ளான் லிட்டில் இந்தியாவில்  தீபாவளி வியாபாரம் மந்தமாக நடப்பதால்  அங்குள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்துக்கள் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. அன்றைய நாள் புத்தாடை அணிந்தும், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடுவர். இதனால் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி கடைகளில் வியாபாரம் களைகட்டும்.

ஆனால், இவ்வாண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ளப் பலக் கட்டுப்பாடுகளால மக்கள் வெளியில் வர இயலாமலும் தீபாவளிக்காகப் பொருட்களும் உடைகளும் வாங்க முடியாமலும் போனது. இதனால் தீபாபளி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என வர்த்தகர்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ குமரன்ஸ் பட்டுமாளிகையின் பங்குதாரர்களில் ஒருவரான இரவிச்சந்திரன் நடராஜன் தெரிவிக்கையில், கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் குடும்பத்தோடு வருவது குறைந்துவிட்டது. மேலும்,

எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

இதே நிலையை கிள்ளான் சென்னை சில்க் பேலஸ் சந்தித்துள்ளதாகக் கூறிய அக்கிளையின் நிர்வாகி ராஜேஷ் கண்ணா, கட்டுப்பாட்டு ஆணையால் சிங்கப்பூர் உட்பட வெளி மாநில வாடிக்கையாளர்களின் வரவு இல்லாததால் தீபாவளிக்கென உள்ள தனி கலையை இழந்திருப்பது வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.

கிள்ளானைப் பொருத்தவரையில் மக்களிடம் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்று பயத்தாலும்  விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடைக்கு வருவது குறைந்து விட்டது. முழுமையான குடும்பமாக தீபாவளிக்கு உடைகள் வாங்குவது இல்லாமல் போய்விட்டது. இதனால், கடந்த ஆண்டு போல் இல்லாமல் இவ்வாண்டு பெரிய கடைகளில் கூட வியாபாரம் மந்தமாக நடக்கிறது. கடந்த காலங்களில் பெரிய கடைகளில் துணி எடுக்க வருவோரில் பெரும்பாலானோர் பொருட்கள் வாங்குவதை சுருக்கி கொண்டதால், வியாபாரம் மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என காயத்ரி பட்டு மாளிகை உரிமையாளர் டத்தோ இரகு மூர்த்தி குறிப்பிட்டார்.

எனப் பெரிதும் நம்புவதாக டத்தோ இரகு மூர்த்தி தெரிவித்தார்.

ஆனால், இதற்கு சற்றும் மாறுபட்டக் கருத்தைப் பதிவு செய்கிறார் பிரிக்ஃபீல்ட்ஸ் ராஜி சில்க் பேலஸ் நிர்வாகி ராஜா. தீபாவளிச் சந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுக்கான வாடிக்கையாளர்கள் என்றும் வற்றாத ஆதரவை வழங்கி வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more