Homeமலேசியாகோவிட்-19 : மீண்டும் நான்கு இலக்கு எண்ணை எட்டிய புதிய சம்பவங்கள் !

கோவிட்-19 : மீண்டும் நான்கு இலக்கு எண்ணை எட்டிய புதிய சம்பவங்கள் !

கோலாலம்பூர், நவம்பர் 19:-

மீண்டும் மலேசியாவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கை எட்டியது.

நேற்று மூன்று இலக்க எண்ணாக இருந்த கோவிட்-19 சம்பவங்கள், இன்று ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  

இன்று மட்டும் 1,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒட்டு மொத்தமாக இதுவரை 51,680 பேரை இந்நோய் தாக்கியுள்ளது.

ஜோகூர், பேரா மாநிலங்களில் தலா ஒரு மரணச் சம்பவமும் சபாவிம் இரண்டு மரணச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டு மொத்தமாக இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரையில் மலேசியாவில் 326 மரணச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 878 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 38,132 பேர் இந்நோயில் இருந்து விடுபட்டுள்ளனர்.

இதுவரையில் 13,222 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வரும் வேளையில், 110 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 37 பேருக்கு சுவாசக் கருவியின் துணை தேவைப்படுகிறது.

இன்று நண்பகல் 12.00 மணி வரையில் சபாவில் மட்டும் 660 பேருக்கு இப்பெருந்தொற்று பரவிய நிலையில் சிலாங்கூரில் 407 பேரைத் தாக்கியுள்ளது.

அதே வேளையில் கோலாலம்பூரில் 72, பேராவில் 48, கிளாந்தானில் 17, பினாங்கில் 8, சரவாக்கில் 8, கெடாவில் 7, மலக்காவில் ஒருவருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றூ கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.  

இன்று பகாங், திரங்கானு மாநிலங்களில் யாருக்கும் புதிதாக இந்நொய்த்தொற்று பரவ்வில்லை.

spot_img

latest articles

explore more