Homeகுற்றவியல்இந்திராகாந்தி வழக்கு : பிரதிவாதிகள் தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்திராகாந்தி வழக்கு : பிரதிவாதிகள் தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

கோலாலம்பூர், நவம்பர் 30:-

தலைமறைவான கணவரைக் கைது செய்யும் விவகாரத்தில் இந்திரா காந்தி தொடுத்த வழக்கில் அரச மலேசிய காவல்துறையும் இதர பிரதிவாதிகளையும் தங்களின் தற்காப்பு வாதத்திற்கான மனுவை தாக்கம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளன்னர்.

தனது 12 வயது குழந்தையை 11 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கடத்திச் சென்றதாகவும் இதன் தொடர்வில் வழக்கு தொடர்ந்த போது அவ்வழக்கை காவல் துறை அலட்சியத்தோடு கையாளுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்திரா காந்தியின் வழக்கறிஞர் இராஜேஷை செதியாளர்கள் தொடர்பு கொண்ட போது, இவ்வழக்கில் பிரதிவாதிகளான மலேசியக் காவல்துறை தலைவர், அரச மலேசியக் காவல் துறை, உள்துறை அமைச்சு, மலேசிய அரசாங்கம் ஆகியோர் தற்காப்பு வாதத்திற்கான மனுவை எதிர்வரும் 2 திசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிடப்பட்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும், வாதியான இந்திராகாந்தியும் அவர்கள் தாக்கல் செய்த தற்காப்பு வாதத்திற்கு எதிர்வரும் 16 திசம்பருக்குள் பதிவு செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளனர். 30 திசம்பர் அன்று வழக்கு நிர்வாகம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28 அக்தோபரில் இந்திராகாந்தி தொடுத்த வழக்கில் முதன்மை பிரதிவாதியான காவல் துறை தலைவர் அலட்சியமாக இருந்ததாகவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முறையான நடவடிக்கையை எடுக்காமல் தனது மகளான பிரசன்னா தீக்‌ஷாவை மீட்டுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைவர் கடந்த ஜனவரி 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கே. பத்மநாதன் என்ற்றியப்படும் தனது முன்னாள் கணவர் (வயது 51) இருக்கும் இடம் தனக்குத் தெரியும் எனவும் இவ்வழக்கு மிகச் சுமூகமாக முடிய தாம் வழிவகை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“அந்தக் கூற்றின்படி முகம்மட் ரிடுவான் இருக்கும் இடம் தனக்குத் தெரிந்தும் முதன்மை பிரதிவாதி என் மகள் பிரசன்னாவை மீட்டுக் கொடுக்கவில்லை”

என இந்திராகாந்தி கூறினார்.

இதர பிரதிவாதிகளும் அரச மலேசிய காவல் துறைக்கு ஆணையிட அதிகாரம் கொண்டவர்கள் என்பதோடு உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் உத்தரவிட்டபடி முகம்மாட் நிடுவானைக் கைது செய்திருக்க வில்லை.

இவர்களின் செயல்பாடானது இதனால் தனது இளைய மகளுக்கும் தனக்குமான உறவில் பெரிய இடைவெளி ஏற்படவும் முகம்மாட் ரிடுவான் தொடர்ந்து தப்பிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

முதன்மை பிரட்திவாதி செய்த அலட்சியத் தவறுக்கு இரண்டாம், மூன்றாம், நான்காம் பிரதிவாதிகள் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த 10 ஏப்ரில் 1993ஆம் ஆண்டு பத்மநாதனை இந்திரகாந்தி திருமணம் செய்தார். அவர்களுக்கு 3 குழந்தைகள்.

11 மார்ச் 2009ஆம் நாள் பத்மநாதன் இசுலாத்தைத் தழுவினார். மேலும், அவர்களின் 3 பிள்ளைகளையும் பராமரிக்கும் உரிமையை 20 செப்டம்பர் 2009 ஆம் நாள் ஈப்போ ஷரியா உயர் நீதி மன்றம் வழி முகம்மட் ரிடுவான் பெற்றார்.

இதற்கு எதிராக இந்திரா ஈப்போ உயர்நீதி மன்றத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் உரிமையைப் பெற மனு செய்து அது காந்தி கடந்த 11 மார்ச் 2010 அன்று வெற்றியும் பெற்றது.

பின்னர், அவர்களின் மகள் பிரசன்னாவை கட்டாயத்தின் அடிப்படையில் முகம்மாட் ரிடுவான் பெற்றுக்கொண்டார். இந்திட்ராகாந்தியின் பத்மநாதனும் கடந்த 8 திசம்பர் 2012ஆம் நாள் விவாகரத்தும் ஆனது.  

இதன் தொடர்பில் கடந்த 30 மே 2014 அன்று ஈப்போ உயர் நீதி மன்றத்தில் முகம்மட் பிரசன்னாவை இந்திராகாந்தியிடம் ரிடுவான் முகம்மாட் ஓப்படைக்கும் வரை சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதே நீதிமன்றத்தில் முகம்மாட் ரிடுவானுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற மனுவும் இந்திராகாந்தியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

தனது மனுவை 12 செப்டம்பர் 2014ஆம் நாள் ஈப்போ உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால், அம்முடிவை மேல்முறையீடு நீதி மன்றம் நிராகரித்தது.

இருப்பினும், 20 ஏப்ரல் 2016ஆம் நாள் முகம்மாட் ரிடுவான் கைது செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more