Homeஆன்மீகம்மூன்று நாள் திருக்கார்த்திகை விளக்கீடு விழா

மூன்று நாள் திருக்கார்த்திகை விளக்கீடு விழா

ஒளி வடிவான இறைவனை விளக்கேற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் ஒளிபெறச் செய்யும். வேத  புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் விளக்கேற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

தமிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை விளக்கீடு.

எல்லா நாளுமே விளக்கேற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் விளக்கேற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது இந்த விழாவைக் கொண்டாடும் இந்துக்களின் நம்பிக்கை.

இந்து நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தில் இந்த விழா மலேசிய இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டும் இவ்விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் கொண்டாடப்படும்.

spot_img

latest articles

explore more