கோலாலம்பூர், திசம்பர் 1:-
இன்று காலை நாடாளுமன்றத்தில் தீ விபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் நாடாளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேற ஆணையிடப்பட்டுள்ளனர்.
காலை மணி 10.18 தொடங்கி நாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என அவைத் தலைவர் டத்தோ அஸார் அஸிஸான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளஆறு காரணமாக தீவிபத்துக்கான எச்சரிக்கை ஒளி எழுப்பப் பட்டிருக்குக் கூடும் என்றும் இவ்விவகாரம் கூடுதல் ஆய்வில் இருப்பதாகவும் அவர் குரிப்பிட்டர்.
பின்னர், காலை மணி 10.30 அளவில் அனைவரும் நாடாளுமன்றத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டு கூட்டம் தொடர்ந்ததாக மேலும் அவர் கூறினார்.


