Homeஅரசியல்மேலவை உறுப்பினராக டத்தோ டி மோகன் பதவி உறுதிமொழி!

மேலவை உறுப்பினராக டத்தோ டி மோகன் பதவி உறுதிமொழி!

கோலாலம்பூர், டிச. 1-

மஇகாவின் உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி மோகன் 2ஆவது முறை மேலவை உறுப்பினராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

2017ஆம் ஆண்டு முதல் முறையாக மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற அவர், இந்தியச் சமுதாயம் சார்ந்த பல விவகாரங்கள் குறித்து மேலவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணனுடன் செனட்டர் டத்தோ டி மோகன்

மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த டத்தோ டி. மோகன், மலேசிய அரசியலில் தனக்கென தனி அடையாளத்தைப் பதிவு செய்தார். அத்தருணத்தில் ஆலய உடைப்பு உட்பட பல்வேறான பிரச்சினைகளுக்குத் துணிந்து குரல் கொடுத்தார்.

மஇகாவின் இளைஞர்கள் மீண்டும் புதுப் பொலியுடன் செயல்படுவதற்கு வழிவகுத்த தலைவர்களின் வரிசையில் டி மோகனும் இடம்பிடித்தார். டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தபோது, மிகவும் ஆக்ககரமாகச் செயல்பட்ட அக்கட்சி மோகன் தலைமையிலும் முன்னோக்கிச் சென்றது.

இதனிடையே இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக செனட்டர் டத்தோ டி மோகன் மேலும் ஆக்ககரமான செயல் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அநேகன் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

spot_img

latest articles

explore more