Homeமலேசியாகோவிட்-19 : இன்றும் மூவர் மரணம் !

கோவிட்-19 : இன்றும் மூவர் மரணம் !

கோலாலம்பூர், திசம்பர் 1:-

மலேசியாவில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் மூவர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 363 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

இன்று மட்டும் 1,472 பேருக்குப் புதிதாக இந்நோய்த்தொற்று கண்டாறியப்பட்டுள்ள வேளையில் இதனால் பாதிக்கப்ப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67,169 ஐ எட்டியுள்ளது.

இது வரையில் 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 44 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 1,552 பேர் குணமடைந்துள்ள வேளையில் சுமார் 56,311 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்றையச் செய்தியாளார் சந்திப்பில் வெளியிட்டார்.

spot_img

latest articles

explore more