Homeஉலகம்10 மாதங்கள் கடந்தும் வீரியம் குறையாத கோவிட்-19 : உலகளவில் 14.85 இலட்சம் பேர் உயிரிழப்பு...

10 மாதங்கள் கடந்தும் வீரியம் குறையாத கோவிட்-19 : உலகளவில் 14.85 இலட்சம் பேர் உயிரிழப்பு !

நியூயார்க், திசம்பர் 2:-

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இப்பெருந்தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கோவிட்-19ஆல் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.41 கோடியைக் கடந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து இதுவரை 4.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் இத்தொற்றுத் தாக்குதலுக்கு இதுவரை 14.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 தாக்கியவர்களில் 1.82 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா –  1,40,85,884,
இந்தியா –  94,95,661,
பிரேசில் –  63,88,526,
ரஷியா –  23,22,056
பிரான்ஸ் – 22,30,571
ஸ்பெயின் – 16,73,202
இங்கிலாந்து – 16,43,086
இத்தாலி – 16,20,901
அர்ஜென்டினா – 14,32,570
கொலம்பியா – 13,24,792
மெக்சிகோ – 11,13,543
ஜெர்மனி – 10,85,661
போலந்து – 9,99,924
ஈரான் – 9,75,951
பெரு – 9,65,228
தென்னாப்பிரிக்கா – 7,92,299
– தினகரன்

spot_img

latest articles

explore more