பத்துகேவ்ஸ், டிச-2

பாஸ் கட்சியுடன் இணைந்ததற்கு வருத்தப்படுவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆளும்கட்சியாக மாறிய பிறகு அவர்களின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் தலைமையில் மீண்டும் ஒரு இந்துக் கோவில் உடைப்பு நேர்ந்துள்ளது. நேற்று கோலா கெடா தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் கோவிலை அலோர் ஸ்டார் நகர மன்றத்தால் உடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மஇகா தமது ஆதங்கத்தைப் பதிவு செய்த வேளையில், அது நாட்டின் நிலைத்தன்மைக்கு எதிரானது என கெடா மந்திரி பெசார் கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்த தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அக்கட்சியைக் கடுமையாகச் சாடினார்.

இவர்களின் உண்மையான முகம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் ஏன் மற்ற கட்சிகள் பணியாற்றவில்லை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. பாஸ் கட்சியின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை.

பாஸ் கட்சி தமது நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அம்னோவுடன் இணைந்து செயல்பட்டவர்கள் இப்போது பெர்சத்துவுடன் செயல்படுகிறார்கள்.

https://www.facebook.com/anegunnews/videos/819834865522611/

மஇகாவின் பதிவை ரத்து செய்ய வேண்டுமெனக் கெடா மந்திரி பெசார் கூறியுள்ளார். அவருக்கு நான் சவால் விடுகிறேன். முடிந்தால் செய்து காட்டுங்கள். இல்லையென்றால் பதவி விலகுங்கள்.

மேற்கண்டவாறு தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் பேசினார்.