Homeஅரசியல்பேரா மாநில முதல்வர் : அம்னோ , அமானா கட்சிகளின் பரிந்துரை யார் ?

பேரா மாநில முதல்வர் : அம்னோ , அமானா கட்சிகளின் பரிந்துரை யார் ?

ஈப்போ, திசம்பர் 4:-

இன்று பேரா மாநில அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ள சூழலில் புதிய மாநில முதல்வர் யார் எனப் பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. அம்னோ தரப்பிலிருந்து யாருடையப் பெயர் பரிந்துரைக்கப்படும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்தும் பேரா மாநில அரசியல் சூழல் குறித்து பகிர்ந்துகொள்ள எந்தத் தகவலும் இல்லை என பேரா மாநில அம்னோவின் தலைவர் சரானி முகம்மட் தெரிவித்துள்ளார்.

பேரா மாநில முதல்வர் பதவி குறித்து இன்னும் எவ்விதக் கலந்துரையாடலும் நடக்கவில்லை.

பேரா மாநிலத்தில் அம்னோவுக்கும் ஜ.செ.க.வுக்கும் தலா 25 , 16 சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன.

அமானாவுக்கு 5 இடங்கள், பெர்சத்துவுக்கு 6 இடங்கள், பாஸ் பட்சிக்கு 3 இடங்கள், பி.கே.ஆர் கட்சிக்கு 3 இடங்கள், சுயேட்கைக்கு 1 இடம் இருக்கின்றன.

மாநில முதல்வர் யார் என்று முடிவு செய்யும் விவகாரத்தில் இன்னும் அமானா கட்சி முடிவு செய்யவில்லை என அக்கட்சியைச் சார்ந்த சுங்கை ராப்பாட் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் நிஸார் ஜமாலுடின் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more