Homeஅரசியல்“நம்பிக்கைக் கூட்டணியுடன் அம்னோ இணைந்தால் ஜோகூர் அரசாங்கம் வலுபெறும்!”

“நம்பிக்கைக் கூட்டணியுடன் அம்னோ இணைந்தால் ஜோகூர் அரசாங்கம் வலுபெறும்!”

ஜோகூர் பாரு, திசம்பர் 4:-

பேரா மாநிலத்தைப் போல் ஜோகூர் மாநிலமும் செயல்பட்டு நம்பிக்கைக் கூட்டணியுடன் அம்னோ இணைந்தால் நிச்சயமாக ஜோகூர் மாநில அரசு மேலும் வலு பெறும் என ஜ.செ.க. சட்ட மன்ற உறுப்ப்பினர் ஷேக் ஓமார் அலி தெரிவித்துள்ளார்.

இன்று காலை பேரா மாநில அரசு கவிழ்க்கப்பட்டது தொடர்பில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாலோ சட்டமன்ற உறுப்பினரான அவர் மேலும் தெரிவிக்கையில், பேராவை போல் ஜோகூரில் செயல்பட்டால் அம்னோவும் (14 தொகுதிகள்) நம்பிக்கைக் கூட்டணியும் (27 தொகுதிகள்) இணைந்தால் மொத்தம் 47 தொகுதிகளாக உரு பெறும். இந்த எண்ணிக்கை தற்போதைய மாநில அரசைக் காட்டிலும் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூரைப் பொருத்த வரையில், அம்னோ 14 தொகுதிகள், பெர்சத்து 12, ம.இ.கா. 2, பாஸ் 1 என்றக் கணக்கின் படி ஆட்சி அமைத்துள்ளது.

ஜோகூரில் அம்னோவும் நம்பிக்கைக் கூட்டணியின் இணைந்தால் 41 தொகுதிகள் கொண்டு 3இல் 2க்கும் மேலான பெரும்பான்மை கொண்ட வலுவான அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இது ஏற்றுக்கொல்ளப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் தனது கையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜோகூரின் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததர்குக் காரணம் பெர்சத்து தேசிய முன்னணி, பாஸ் கட்சியுடன் இணைந்ததாலே அன்றி, தேசியக் கூட்டணி அரசாங்கம் இங்கு உருவாகி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more