Homeஅரசியல்ஜோகூர் முதல்வருக்கு பெர்சத்துவின் ஆதரவு குறித்து சோதிக்கப்பட வேண்டும் ! – அமானா

ஜோகூர் முதல்வருக்கு பெர்சத்துவின் ஆதரவு குறித்து சோதிக்கப்பட வேண்டும் ! – அமானா

ஜோகூர் பாரு, திசம்பர் 5:-

ஜோகூர் மாநில முதல்வரான டத்தோ ஹஸ்னி முகம்மட் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சட்டமன்றக் கூட்டத்தில் கொண்டுவர அம்னோவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரையை அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ சாலாஹுடின் ஆயூப் முன்வைத்ததோடு, ஜோகூர் மாநில முதல்வருக்கும் அவரது ஆட்சி தொடர்வதற்கும் ஆதரவு இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினரான அவர் மேலும் கூறுகையில், இதனால் பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோகூரில் ஆட்சி அமைத்திருக்கும் தேசியக் கூட்டணியோடு கைகோர்த்திருப்பது தொடருமா என்பதைப் பரிசோதிக்க உதவும் எனத் தெரிவித்தார்.

நாளை ஜோகூர் சட்டமன்றம் இத்தவணையில் கூடி 2021க்கான பட்ஜெட்டை அங்கீகரிக்கும் இறுதி நாள்.

நாடாளுமன்றம் அளவிலும் சரி அல்லது (பேரா மாநில) சட்டமன்ற அளவிலும் சரி, நாட்டில் தற்போது நடக்கும் அரசியல் நாடகங்களின் விளைவாக ஆட்சி அமைத்திருக்கும் ஓர் அரசாங்த்தின் நிலைத்தன்மை குறித்து மக்கள் கவனித்து வருகிறார்கள்.

போதிய ஆதரவு அந்த அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கிறதா என்பது மக்கள் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

எனவே, ஜோகூர் மாநில முதல்வர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜொகூர் அம்னோ கொண்டு வர வேண்டும் என்பது தனது கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசினும் நாளை நடைபெறவுள்ள  கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜோகூரின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 29 தொகுதிகள் தேசியக் கூட்டணீயின் வசம் உள்ளன. எதிர்க்கட்சியினர் வசம் 27 தொகுதிகள் உள்ளன.

தேசியக் கூட்டணியிடம் உள்ள 29 தொகுதிகளில் அம்னோவிடம் 14, பெர்சத்துவிடம் 12, மா.இ.க.விடம் 1, பாஸ் கட்சியிடம் 1 எனும் அடிப்படையில் உள்ளது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஜ.செ.க.விடம் 14 தொகுதிகளும், அமானாவிடம் 4 தொகுதிகளும் பி.கே.ஆர் வசம் 4 தொகுதிகளும் உள்ளன.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியாக தேசியக் கூட்டணியை ஆதரிக்கின்றார்களா இல்லையா என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரியப்படுத்தி விடும்.

இதனால் ஜோகூர் மாநில தேசியக் கூட்டணியின் ஆட்சி குறித்தும் அம்மாநில அரசியல் சூழல் குறித்தும் சில பரபரப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more