ஈப்போ, திசம்பர் 5:-
பேரா மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமு மீண்டும் சுல்தானை சந்திப்பதற்காக கிந்தா அரண்மனைக்கு வந்திருப்பதாகத் தெரிய வருகிறது.
அவருடைய காரில் பிற்பகல் 3.00 மணிக்கு கிந்தா அரண்மனை நுழைவாயிலில் நுழைந்ததாக அறியப்படுகிறது.
நேற்றைத் தொடர்ந்து சுல்தானைச் சந்திக்க அவர் இரண்டாவது முறையாக வருவதாகத் தெரிகிறது
முற்பகலில் பேரா மாநில ஆட்சி மாற்றம் குறித்து அமானா கட்சியின் தலைவர் டத்தோ அஸ்முனி அவி, பேரா மாநில பி.கே.ஆர். கட்சியின் தலைவர் ஃபர்ஷா வாஃபா சல்வாடோர் ரிஸால் முபாரக், பேரா ஜ.செ.க.வின் தலைவர் ஙா கோர் மிங் ஆகியோர் சுல்தானைச் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


