சென்னை | பிப்பரவரி 3 :-

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க குக் வித் கோமாளி புகழ் ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் முதல் சீசன்ஈரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

இவர்களின் நகைச்சுவையை இரசிக்க பெரிய இரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் சமூக ஊடகங்களில் குக் வித் கோமாளி அஸ்வின், ஷிவாங்கி உள்ளிட்டோரை மில்லியன் கணக்கில் இரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடியால் கலக்கி வரும் புகழுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

https://twitter.com/DrumsticksProd/status/1356580656197685249

அருண் விஜய் உடன் நடிக்க இருக்கும் புகழுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.