Homeசமூகம்ஈப்போ ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் முதன்முறையாக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

ஈப்போ ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் முதன்முறையாக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

ஈப்போ:

பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், ஈப்போ ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் நவம்பர் 22ஆம் தேதி முதன்முறையாக மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

கிந்தா ரோட்டரி கிளப் , ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் ஜெலாப்பாங் ருக்குன் தெத்தாங்கா ஆகியவற்றின் ஏற்பாட்டில், கிந்தா மாவட்டச் சுகாதார அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இம்முகாம் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக இவ்வமைப்புகளின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முதன்முறையாக மருத்துவப் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, ஈப்போ ஜெலாப்பாங் கம்போங் டத்தோ அகமட் சைட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் மண்டபத்தில் இம்முகாம் நடைபெறும்.

இதில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கண் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிந்துரை, மார்பகச் சுயபரிசோதனை குறித்த விழிப்புணர்வு, மனநலப் பரிசோதனை, உளவியல் ஆலோசனை, மருந்துப் பயன்பாடு குறித்த ஆலோசனை, பல் மருத்துவச் சேவை, காசநோய் பரிசோதனை மற்றும் இயன்முறை மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

இதனுடன் இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களும் சுகாதாரக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளன.

இம்மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகப் பங்கேற்று பயன்பெறலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

latest articles

explore more