சிம்பு – கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும், அப்படத்தை ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை என்றும் கூறப்படுகிறது.

மீம்ஸ்கள் எதிரொலி – மாளவிகா மோகனன்

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனின் நடிப்பைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன.

பல காட்சிகளில் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்ற விமர்சனமே அதிகம். இவர் நடித்த காட்சிகளை ‘ஸ்கிரீன்ஷாட்’ செய்து பல மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்தன. அவற்றை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா.

தன்னைப் பற்றி வெளிவந்த சில மீம்ஸ்களை அவரே பகிர்ந்து, “என்னைப் பற்றிய சொந்த மீம்ஸ்களுக்கு நான் கொஞ்சம் லேட்தான். ஆனால், இவை எல்லாம் மிகவும் காமெடியாக உள்ளன நண்பர்களே. மகிழ்ச்சியாகவே அதில் சிலவற்றைப் பகிர்கிறேன். இதில் டூத்பேஸ்ட் பற்றிய மீம்ஸுக்கு சிரித்துத் தள்ளிவிட்டேன். உங்களைப் பார்த்து நீங்களே சிரிக்காவிட்டால் வாழ்க்கை மிகவும் போரடித்துவிடும், இல்லையா,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்