Homeமலேசியாலெவி கட்டணம் தள்ளிவைப்பு : டத்தோ ஶ்ரீ சரவணன் அறிவிப்பு !

லெவி கட்டணம் தள்ளிவைப்பு : டத்தோ ஶ்ரீ சரவணன் அறிவிப்பு !

கோலாலம்பூர் | ஜூன் 5 :-

வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் வேலையில் அமர்த்த செலுத்தப்படும் லெவி கட்டணம் அடித்த ஆண்டு சனவரி முதலாம் நாள் வரை தள்ளி வைக்கப்படுகிறது என மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இவ்வாண்டுக்கான லெவிக் கட்டண ஒத்திவைப்பு சனவரி 1 ஆம் நாள் தொடங்கி ஜூலை முதலாம் நாள் நீட்டிக்கப்பட்டிருந்தது.

கோவிட்-19 தாக்கம் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்படையச் செய்திருப்பதால் அது இதரத் துறையும் சார்ந்துள்ளது. எனவே, பல துறைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளமையால், அடுத்தாண்டு சனவரி 1 வரையில் வெளி நாட்டு ஊழியர்களுக்கான லெவி கட்டணம் ஒத்திவைக்கப்படுகிறது.

பல கட்டத்திலான லெவி கட்டணம், பின்னர் நடைமுறைக்கு வரும் போது தொடர்புடைய துறைகளின் தேவைகளைக் கருதி வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

– பெர்னாமா

spot_img

latest articles

explore more