ஈப்போ | ஜூன் 5 :-

பிரதமர் துறாஇயின் முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோஃப் தற்பொழுது பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் புதிய தலைவராகிறார்.

இதற்கு முன்னர் அமானா கட்சியின் துணைத் தலைவரும் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜாஹிட், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் கூட்டங்களை இணையம் வழி வழிநடத்தி வந்திருந்தார் என நம்பிக்கைக் கூட்டணியின் தொடர்புத் துறை ஒருங்கிணைப்பாளர் முஹைமின் சுலாம் கூறினார்.

பேரா மக்களை இப்பெருந்தொற்றில் இருந்து மோட்டுக் கொண்டு வர பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணி உறுதி கொண்டுள்ளது. மேலும், நலமான மக்களாட்சின் கொண்ட ஆட்சியையும் வழங்க சித்தமாய் இருப்பதாக அவர் கூறினார்.

அந்தக் கூட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகள் கலந்து கொண்டன.

பேரா மாநில அமானா கட்சியின் தலைவர் அஸ்முனி அவி, பேரா மாநில ஜ.செ.க.வின் தலைவர் ஙா கோர் மிங், பேரா மாநில பிகேஆர் கட்சியின் பொறுப்பாளர் ஃபர்ஹாஷ் வாஃபா சல்வாடோர் ரிஸால் முபாராக் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

மேலும், அக்கூட்டத்தில் இதர நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களான ஃபக்ருடின் முகம்மட் ஹிஷாம், அகமாட் தர்மிஸி ரம்லி, ஙே கோ ஹம், வ. சிவக்குமார், வோங் கா வோங், எம் ஏ தினகரன், தன் கர் ஹிங், பல்டிப் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் புதிய தலைவரான முஜாஹிட், பேரா மாநிலத்தில் அதன் மக்களிடத்தில் மீண்டும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியை மலரச் செய்ய அனைத்து உறுப்பியக் கட்சிகளுடன் ஒத்துழைக்கும் எனக் கூறினார்.

அதே சந்திப்புக் கூட்டத்தில் இதர நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கல் அனைவரும் பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணியின் துணாஇத் தலைவர்களாக நியமிக்கப்பட்டதாக முஹைமின் கூறினார்.