Homeமலேசியாமுதியோர் பாதுகாப்பு மையங்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசித் திட்டம் !

முதியோர் பாதுகாப்பு மையங்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசித் திட்டம் !

ஷா ஆலாம் | ஜூன் 6 :-

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி முதியோர் பராமறிப்பு மையங்களிலும் பேறு குறைந்தவர்களுக்கும் நேரடியாகவே நென்று தடுப்பூசி போடும் திட்டத்தை சிலாங்கூர் மாநில சுகாதாரத் திணைக்களம் மேற்கொள்ள உள்ளது.

தடுப்பூசி பெறுவதில் இந்தத் தரப்பினர் விடுபட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்ய 16 செயற்குழுக்கள் இயங்கவுள்ளன என சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்வழி, அரசு முதியோர் காப்பகமான Rumah Seri Kenangan, Rumah Ehsan, சமூக நல இலாகாவின் இயங்கும் பராமறிப்பு மையங்கள், சட்டம் 506, சட்டம் 586 இன் கீழ் இயங்கும் பராமறிப்பு மையங்கள், தனியார் முதியோர் பராமறிப்பு மையங்கல் ஆகியவை நன்மை பெறுவர்.

இதில் 68 மையங்களில் 1,893 பேறு குறைந்தவர்கள்வ் பராமறிப்பு ஊழியர்கள் ஆகியொர் அடங்குவர்.

spot_img

latest articles

explore more