கோலாலம்பூர் | ஜூன் 6 :-
அரசாங்கம் அறிவித்த 150,000 மடிக்கணினிகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் கல்வி அமைச்சு அவ்வளவு சுமூகமாக முயற்சியை மேற்கொள்ளவில்லை. அறிவித்த 6 மாதங்களில் 13,000க்கும் குறைவான மடிக்கணினிகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவிக்கயில், தேர்வு அடிப்படையில் 8.6% மட்டுமே அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் வரையிலும் 13,000 மடிக்கணினிகள் பி40 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12 ஜூன் வரையில் 40,290 மடிக்கணினிகளும் 96,823 மடிக்கணிகள் செப்தெம்பர் வாக்கிலும் பகிர்ந்தளிக்கப்படும்.
மிகவும் தாமதமான முறையில் அம்மடிக்கணினிகள் இது வரை ப்பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கல்வி அமைச்சரும் அவரது அமைச்சும் துரிதப்படுத்தும் நடவடிக்கையை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
அல்லது டாக்டர் ரட்ஸி ஜிடின் பதவி விலக வேண்டும் என ஃபாஹ்மி கூறியுள்ளார்.
பள்ளிக்கூடங்கள் ஜூன் 14 வரை தவணை முறை விடுப்பில் இருக்கும்.
அட்தன் பின்னர் ஏறத்தாழ 25 நாட்களுக்கு இல்லிருப்புக் கற்றல் முறாஇயில் இயன்ஹ்கலையில் செயல்படும்.
இருந்தாலும் பல மாணவர்கள் அந்த முறைப்படி கல்வியைத் தொடர பல சிக்கல்களை எதிர்கொள்வர்.
கடந்த பிப்பரவரி மாதத்தில், 1,85 மில்லியன் மாணவர்கள், அதாவது 36.9 விழுக்காடு மாணவர்கள் இல்லிருப்புக் கற்றலில் ஈடுபட முடியாமல் சரியான கருவிகள் இல்லாமல் சிரமப்படுவர் என உத்துசான் மலேசியா தகவல் வெளியிட்டிருந்தது.


