கோலாலம்பூர் | ஜூன் 7 :-
தற்பொழுதுள்ள முழு ஊரடங்கு காலத்தில் தங்களின் சொந்த பகுதியில் மட்டுமே உடற்பயிற்சி செய்ய காவல்துறி அனுமதி வழங்கியுள்ளது.
மற்றப் பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்ள காவல்துறை தடை விதித்துள்ளது. அதனால் தண்டம் விதிக்கப்படலாம்.
இது குறித்து அம்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகம்மட் ஃபாருக் இஷாக் தெரிவிக்கயில் இங்குள்ள தாமான் மூகியா ஜெயவைச் சேர்ந்த 23 வயது ஆடவர் ஒருவருக்கு 6.6 கி.மீ. தள்ளி தாமான் துங்கு அப்துல் இரகுமான் பகுதியில் மெதுவோட்டம் / உடற்பயிற்சி செய்ததற்காக ரி.ம. 1,500 தண்டம் விதிக்கப்பட்டது.
இது போன்ற விதி மீறல்களைப் பொதுமக்கள் புரியாமல் இருக்க வேண்டும்.
தொற்றுப் பரவலைத் தடுக்க அதிகாரத்துவத்தினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக முகம்மட் ஃபாருக் இஷாக் கூறினார்.
தனித்து உடற்பயிற்சி செய்தாலோ அல்லது மெதுவோட்டத்தில் ஈடுபட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படாது என்று பொருள்படாது.
ஆனால்ல், சொந்த இடத்தில் மட்டுமே அந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


