பாசீர் கூடாங் | ஜூன் 8 :-
இங்குள்ள தாமான் கோத்தா மாசாயில் இறந்து கிடந்தன் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டது. அதே வேளாஇயில், அவரது கணவருக்கு பல சுகாதாரப் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
வாரிசுகள் இல்லாத அந்த இணையினர் அவரளது வீட்டின் வரவேற்பு அறையில் இறந்து கிடந்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டப் பரிசோதனையில், அந்தப் பெண்மணிக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குரித்து தகவல் தெரிவித்த ஶ்ரீ ஆலாம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டெணன்ட் முகம்மட் சோஹாய்மி இஷாக், இறந்து கிடந்த கணவனுக்கு 68 வயது எனவும் மனைவிக்கு 61 வயது எனவும் அவர்களின் உடற்கூறாய்வு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.
இவர்களின் தத்துப் பிள்ளையின் தொலைப்பேசி அழைப்புக்குப் பதில் அளிக்காததால் நேரடியாகவே வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது அவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் இறந்து ஏறத்தாழ 48 மணி நேரங்கள் ஆகி இருக்கலாம் என முகம்மட் சோஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
நெஞ்சு வலி, உயர் இரத்த அழுத்தம், சீரிழிவு நோய் ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த ஆடவர் இறந்திருக்கலாம்.
இச்சம்பவத்தில் எந்தக் குற்றப் பின்ணனியும் இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.


