Home உலகம் பன்னாட்டுப் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, பேரா மகத்தான சாதனை

பன்னாட்டுப் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, பேரா மகத்தான சாதனை

1916

தெலுக் இந்தான் | ஜூன் 8 :-

கடந்த 1 ஜூன் – 06 ஜூன் அனைத்துலக ரீதியில் நடைப்பெற்ற INTOC 2021, TURKEY புத்தாக்க போட்டி வெகு சிறப்பாக இயங்கலை வாயிலாக நடைபெற்றது. அப்போட்டிக்குப் பலதரப்பட்ட பள்ளிகள் மிக்கா (MIICA) நிறுவனத்தின் தலைவர் உயர்திரு கணேசன் அவர்களின் மேற்பார்வையில் 43 பள்ளிகள் பங்கேற்றனர். ஏறத்தாழ 21 நாடுகளிலிருந்து 180 குழுக்கள் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுவரை கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை நம் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தனியாள் முறையில் முதன் முறையாகக் கலந்து கொண்டனர். நம் மாணவர்கள் செல்வன் பிரசீலன், செல்வன் யசோதன், செல்வன் பவனேஷ் பிள்ளை ஆகியோர் இறுதிச் சுற்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பெருமைக்குரியதாகும். அதே நேரத்தில் 2 வெண்கலம் 2 வெள்ளி பதக்கங்களை வென்று நமக்கும் பள்ளிக்கும் நாட்டிற்கும் நற்பெயரை ஈன்று உலகளாவிய நிலையில் சாதனைப் படைத்துள்ளனர்.

புத்தாக்கத்தில் சிதம்பரம் பிள்ளை மாணவர்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதனை உலகளவில் பறைச்சாற்றி உள்ளனார். புத்தாக்கங்களை உருவாக்கிய மாணவர்களின் விபரம் பின்வருமாறு:

செல்வன் பவனேஷ் பிள்ளை
புத்தாக்கம் : மறுசுழற்சி பொருளால் USB மின் காற்றாடி
பதக்கம் : வெண்கலம்

கோறனி நச்சில் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் மாணவர்கள் மடிக்கணினி அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலையில் மறுசுழற்சி பொருளால் USB மின் காற்றாடி உருவாக்கி தானும் தன் நண்பர்ளையும் ஈர்த்துள்ளார். இக்காற்றாடி உருவாக்கி சக மாணவர்கள் வீட்டிலுள்ள பழைய பொருட்களால் புத்தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதைத் தன் ஆய்வின் வழி நிரூபித்துள்ளார்.

செல்வன் யசோதன் & செல்வன் பிரசீலன்
புத்தாக்கம் : மறுசுழற்சி பொருளால் நீர் சுழற்சி வாயிலாக இயற்கை மணம் உருவாக்கம்
பதக்கம் : வெண்கலம்

இம்மாணவர்கள் நெகிழி புட்டிகளைப் பயன்படுத்தி நீர் சுழற்சி அழகு பொருளை உருவாக்கினர். அதோடு இயற்கை மணங்களை இதோடு இணைத்து தன் கற்றல் அறையினை நறுமனத்தோடு வைத்திட வழிவகைச் செய்துள்ளனர். சுற்றுச்சுழல் நறுமணம் வாயிலாக மாணவர்கள் தங்கள் கற்றலில் அதிகக் கவனம் செலுத்த இயலும் என்பதனைத் தங்கள் ஆய்வின் வாயிலாக நிரூபித்துள்ளனர்.

செல்வன் நிஷாகர்
புத்தாக்கம் : மறுசுழற்சி பொருளால் குளிர்சாதனப் பெட்டி
பதக்கம் : வெள்ளி

குளிர்சாதனப்பெட்டி அதிக விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அதிகமானோரால் குளிர்சாதனப்பெட்டி வாங்க இயலாமல் போகிறது. நம் வீட்டைக் குளிரவைக்க ஒரு குளிரூட்டும் முறை ஒரு நல்ல மலிவானதாக இருக்க வேண்டும் என்ற எண்னத்தில் இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இந்தக் குளிசாதன் பெட்டியினை நாம் செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்லவும் கூடுதல் ஆற்றல் திறன் கொண்டவையாகவும் இருக்கிறது. இது நாள் முடிவில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

செல்வி அருந்ததி
புத்தாக்கம் : மறுசுழற்சி பொருளால் USB புற்களை வெட்டும் கருவி
பதக்கம் : வெள்ளி

இம்மாணவி தன் வீட்டில் புற்களை வெட்டிட இந்தக் கருவியினை உருவாக்கியுள்ளார். மேலும் சுற்றுச்சுழலைப் பாதுகாத்திடவும் இவர் இக்கருவியினை USB மின்சேமிப்பு (powerbank) மூலமாகப் பயன்படுத்திச் செய்திட முடியும் என்பதனை இவரின் ஆய்வில் நிரூபித்துள்ளார்.

நமது சாதனை நட்சத்திரங்கள் பன்னாட்டு புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டு சாதனைப் படைத்துள்ளனர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியாகும். மேலும் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும் என்பதனைக் குறிப்பிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பது தொடர்கதையாகி வருகின்றது.

அந்த வகையில், துர்க்கியில் நடந்த உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டியில் மலேசியாவிலிருந்த்ய் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 வெண்கலமும் 2 வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளன.

இச்சாதனைச் சிற்பிகளை உருவாக்கிய ஆசிரியர் திரு. தனேசு பாலகிருட்டிணன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும். மேலும் நம் பள்ளி குழுவுக்குக் கைக்கொடுத்த ஆசிரியை அனிதாவிநாயகி அவர்களுக்கும் நன்றி.

மேலும் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயர்திரு கணேசன் இராமசாமி அவர்கள் கூறுகையில் “மாணவர்கள் அனைவருக்கும் தனித்திறமைகள் நிறைய உள்ளன, ஆசிரியர்களாகிய நாம் தான் அவர்களுக்கான களத்தினை அடையாளங்கண்டு உலக மேடையில் ஏற்றிட வழிவகுக்க வேண்டும். மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்கள் வெற்றி.“

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்ன் தலைவராகிய உயர்திரு சக்திவேல் அவர்கள், “நம் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு அளவில் பங்கேற்றுச் சாதனைப் படைத்துள்ளதை எண்ணி அகம் மகிழ்கிறார். இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களை மனதார பாராட்டுவதோடு மேலும் இது போன்ற போட்டிகளில் நம் பள்ளி பீடுநடை போட துணையாகச் சங்கம் இருக்கும் என்பதனை வலியுத்தியுள்ளார்.

நம் மாணவர்கள் மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.