கோலாலம்பூர் | ஜூன் 11 :-

கடந்த மூன்று நாட்களாய் அரண்மனை வாசலில் முகாமிட்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு உணவு குறித்து எந்தக் கவலையும் ஏற்படாத வண்ணம் அரண்மனை அவர்களை மிகச் சிறந்த முறையில் கவனித்து வருகிறது.

அரண்மனையின் இரண்டாம் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் ஊடகவியலாளர்களுக்கென சிறப்பாக உணவுப் பொருட்கள் அரண்மனையிலிருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மாமன்னரைச் சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் குறித்து செய்தி வழங்கி வரும் ஊடகவியலாளர்களுக்கு அருகில் உள்ள உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் வந்த நிலையில் உள்ளன.

 ரொட்டி, பீகூன் கோரேங், நாசி கோரேங், பிரியாணி, மெக்டோனல்ட்ஸ் துரித உணவு, தேநீர், குளிர்பானம் ஆகியன அரண்மனை வாசலில் காத்திருகும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது வரையில், இன்னும் ஓர் அரசியல் தலைவர் மாமன்னரைச் சந்திக்க வந்திருக்க வேண்டும்.

அம்னோ தலைவர் அகமாட் ஸாஹிட், ம.இ.கா. தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோரைத் தொடர்ந்து பார்டி பெர்சத்து சபா PBS கட்சியின் பிரதிநிதி மாமன்னரைச் சந்திக்க வருவாரா என எதிர்ப்பார்ப்பை ஊடகவியலாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.