கோலாலம்பூர் | ஜூன் 11 :-
கடந்த மூன்று நாட்களாக அரண்மனையை நோக்கி அரசியல் தலைவர்களின் படையெடுப்புப் படலம் அரங்கேறி வந்துள்ள நிலையில், தற்பொழுது 11 வது அரசியல் தலைவராக Parti Bersatu Sabah (PBS) கட்சியின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி அரண்மனை வந்தடைந்தார்.
பிரதமர் துறையில் சபா – சராவாக் மாநில விவகார அமைச்சரான மேக்சிமஸ் ஓங்கிலி பிற்பகல் 2.16 மணியளவில் கருப்பு நிற Vellfire வகைக் காரில் அரண்மனையை வந்தடைந்தார்.
சபாவில் கோவிட்-19 பரவல் உபட பலதரப்பட்ட விவகாரங்களை மாமன்னருடன் கலந்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு முன்னர் அம்னோ கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட், ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மாமன்னரைச் சந்தித்தனர்.
இதுவரையில், பெர்சத்து, பிகேஆர், ஜ.செ.க. அமானா, மசீச, ம.இ.கா., பாஸ், பெஜுவாங், வாரிசான் ஆகியக் கட்சிகள் மாமன்னரைச் சந்தித்து தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளன.
இவ்வனைத்துச் சந்திப்புகளும் எதிர்வரும் ஜூன் 16 ஆம் நாள் நடத்தப்பட உள்ள மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனப் பெரிந்தும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


