கோலாலம்பூர் | ஜூன் 11 :-

பார்டி பெர்சத்து சபா கட்சியின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்தித்த பின்னர் பிற்பகல் 3.24 மணி அளவில் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

அரண்மனையை விட்டு வெளியேறியவர் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமலேயே புறப்பட்டார்.

அவருடன் ஆளும் கட்சி – எதிர்க்கட்சித் தலைவர்களுடனான மாமன்னரின் சந்திப்பு ஒரு நிறைவை நாடியது.

கடந்த மூன்று நாட்களாக 11 அரசியல் கட்சித் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்து வந்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை காபுங்கான் பார்டி சரவாக் Gabungan Parti Sarawak (GPS) தலைவரை மாமன்னர் இயங்கலை வழி சந்திப்பார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக மாமன்னரைச் சந்தித்த அரசியல் தலைவர்கள் ஒரே கருத்தாக கோவிட்-19க்கு எதிரானப் போராட்ட நடவடிக்கைகள், பொருளாதாரப் பிரச்சனை ஆகியவற்றோடு உடனடியாக ஊரடங்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றம் கூட வேண்டும் எனப் பெரும்பாலானோர் மாமன்னரிடம் முன் வைத்திருந்தனர்.