பெட்டாலிங் ஜெயா | ஜூன் 11 :-

மலேசியப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபதில்லா யூசோஃபுக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பதாக நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வமைச்சின் கூற்றின்படி பொதுப்பணித்துறை அமைச்சர் அவ்வப்போது கோவிட்-19 பரிசோதனையை மேர்கொள்வார் எனவும் ஆகக் கடைசியாக ஜூன் 3 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டபோது அவருக்குத் தொற்று கண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு 10.15 மணி அளவில் அவர் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டிருந்தார். அதன் முடிவில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி தமது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் காலத்திலும் அமைச்சின் பணிகள் சரிவர நடப்பதைக் கண்காணித்து அவர் உறுதி செய்வார்.