கோலாலம்பூர் | ஜூன் 12 :-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்தது முதல் தலைநகரில் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட வணிகங்கள் யாவும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படவில்லை என கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

அவை அனைத்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஆணையின்படி வழங்கப்பட்டுள்ளது என டிபிகேஎல் விளக்கியுள்ளது.

மொத்தச் சந்தை, அங்காடிகள், சிறு சந்தைகள், சாலையோரக் கடைகள், உணவு வண்டிகள், நடமாடும் கடைகள், தற்காலிக வியாபார உரிமம் பெற்றவர்கள், குறிப்பிட்ட நேர வணிகங்கள் ஆகியவற்றோடு கேஎல் பிரிஹாத்தின் எனும் பரிவுமிக்க கோலாலம்பூர் திட்டத்தின் கீழ் வியாபார அனுமதி பெற்றவர்கள் ஆகிய வணிகங்கள் மட்டுமே தலைநகரில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளி காலைச் சந்தைகல், இரவுச் சந்தைகள் ஆகியவற்றுக்கு தலைநகரில் அனுமதி கிடையாது.

அனுமதிக்கப்பட்ட அனைத்து வணிகங்களும் எஸ்.ஓ.பி.யைக் கடைபிடிக்க வேண்டும்.

இது வரை டிபிகேஎல் நடத்தி சோதனையில், எஸ்.ஓ.பி.யை முழுதாகப் பின்பற்றாத 22 வணிகங்களுக்கு தண்டம் விதித்துள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் நாள், டிபிகேஎல்-இன் வணிகச் செயல்பாடு அனுமதி குறித்து பல வியாபாரிகள் திருப்தி  அடையவில்லை என சிப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் குறிப்பிட்டிருந்தார்.