செர்டாங் | ஜூன் 19 :-
கோவிட்-19 நோயாளிகளை செர்டாங் MAEPS தனிமைப்படுத்தல் மையத்திறுக் கொண்டு செல்ல சிலாங்கூர் மாநில சுகாதாரத் திணைக்களத்தின் முயறசையில் இரு ஆன்புலன்சுகளும் ஒரு சிறப்பு வேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Maxus V80 வகையைச் சேர்ந்த அவை PKRCB MAEPS 2.0 இன் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

அதில் ஆம்புலன்சுகள் Negative Pressure எனும் சிறப்பு அம்சத்தைக் கொண்டவை. ஆம்புலன்சின் உள்ளே உள்ள காற்று வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அது சுத்திகரிக்கப்படும். இதனால், ஆபத்தான கிருமிகள் வெளியில் பரவுவது கட்டுப்படுத்தப்படும். இந்த சிறப்பு அம்சம் கொண்ட ஆம்புலன்ஸ் மலேசியாவிலேயே முதல் ஆம்புலன்ஸ் ஆகும்.

இந்த ஆம்புலன்ஸ் வகை வேன்கள் சீன நாட்டில் வூகானில் கோவிட்-19 பரவலைக் கையாளக் கூடியத் தன்மை இருப்பதாக ஆய்வும் பரிசோதனை முடிவுகளும் தெரிவிக்கின்றன.

இன்று செர்டாங் PKRCB MAEPS 2.0 தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த இந்த வகை ஆம்புலன்சுகளின் அறிமுக விழாவுக்கு மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா தலைமையேற்றார்.


