Homeஅரசியல்ஜோகூரில் தடுப்பூசிகள் முடிந்து விட்டதால் சில தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன !

ஜோகூரில் தடுப்பூசிகள் முடிந்து விட்டதால் சில தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன !

குளுவாங் | 23/6/2021 :-

ஜோகூர் மாநிலத்தின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி விரைவாக முடிந்து விட்டதால் சில தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷூ கீ, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் ஆகியோர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தடுப்பூசிகள் முடிந்து விட்டக் காரணத்தால் ஜோகூரில் குறைந்தது மூன்று தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  1. பெக்கான் நானாஸ் தடுப்பூசி மையம் (பொந்தியான் மாவட்டம்)
  2. சிம்பாங் ரெங்காம் தடுப்பூசி மையம் (குளுவாங் மாவட்டம்)
  3. பாரிட் ராஜா தடுப்பூசி மையம் (பத்து பகாட் மாவட்டம்)

கூலாய் உட்பட மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அன்றாடத் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தது வந்ததாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜோகூர் மாநில – மாவட்ட நிலையில் வழங்கப்பட்டத் தடுப்பூசியின் எண்ணிக்கை போதவில்லை என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது என அவர்கள் குறிப்பிட்டனர்.

TINJAUAN KE PUSAT PEMBERIAN VAKSIN (PPV) DEWAN TUNKU IBRAHIM ISMAIL, PEKAN  NANAS, PONTIAN | Laman Web MKN

தேசிய நிலையில் நேற்று தடுப்பூசி வழங்கப்பட்ட எண்ணிக்கை மிக அதிகமாக (250,529) பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஜோகூரில் அதற்கு மாறான சூழ்நிலை ஏற்பாட்டுள்ளது.

பல வயது மூத்தவர்கள் இன்னும் தடுப்பூசிகான நேர்முகச் சந்திக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஜோகூரில் நேற்று 17,268 தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் கடந்த 20 ஆம் நாள் அம்மாநிலத்தில் 13,718 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது என வோங் ஷூ கீ-யும் தியோ நீ சிங்-கும் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு முன்னர், ஜோகூர் மாநிலத்தில் கடந்த 14, 15, 17ஆம் நாள், நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்டத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

TINJAUAN KE PUSAT PEMBERIAN VAKSIN (PPV) KEDUA DAERAH KLUANG | Laman Web MKN

சிலாங்கூர் – கோலாலம்பூர் பகுதிகளில் கோவிட்-19 நிலவரம் மிக மோசமாக இருப்பதால் அரசாங்கம் அந்தப் பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்துவதைப் புரிந்து கொண்டிருந்தாலும் இவ்விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மாவட்டத்தின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சில அமைச்சர்களின் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கு தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புக்கான தேதி உறுதியாகிவிட்டது. ஆனால், பல முதியவர்களுக்கும் இன்னும் அது கிடைக்கவில்லை என அந்த இரு நாடாளுமன்ற உறுப்பினார்களும் கூறினர்.

இது போன்ற சம்பவங்களால் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கும் சூழலை உருவாக்குகிறது.

எனவே, மாவட்ட அளவில் பகிர்ந்தளிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கான சிறப்பு செயற்குழு ஒவ்வொரு நாளும் அறிவிக்க வேண்டும் என அவ்விருவரும் கேட்டுக் கொண்டனர்.

TINJAUAN KE PUSAT PEMBERIAN VAKSIN (PPV) KEDUA DAERAH BATU PAHAT | Laman  Web MKN

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை அது நடைமுறைப்படுத்தும் விதத்தின் நேர்மையிலும் தான் உள்ளது என அவர்கள் மேலும் கூறினர்.

தற்பொழுது கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான தகவல்கள் யாவும் மாநில நிலையில் தான் உள்ளதே அன்றி மாவட்ட நிலையில் அல்ல.

spot_img

latest articles

explore more