Homeமலேசியாமெந்தாரி கோர்ட் : ஒவ்வொரு வீட்டிலும் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது ! அடுத்ததாகத் தடுப்பூசி செலுத்தப்படும்...

மெந்தாரி கோர்ட் : ஒவ்வொரு வீட்டிலும் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது ! அடுத்ததாகத் தடுப்பூசி செலுத்தப்படும் !

பெட்டாலிங் ஜெயா | 5/7/2021 :-

இங்குள்ள மெந்தாரி கோர்ட் அடுக்ககத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் யாரும் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயத் தனைமைப்படுத்தலை தங்கள் வீட்டிலேயே மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வடுக்ககப் பகுதியைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியின் மொத்தக் கட்டுப்பாடும் காவல்துறை, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் கீழ் உள்ளது. ஏறத்தாழ 500 நேர்வுகள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட பின்னர் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சென்று கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டனர்.

May be an image of 1 person and standing

இம்மாதம் முதல் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு மெந்தாரி கோர்ட் அடுக்ககப் பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அவ்வப்போது அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிப் பொருட்கள் சமூக நல அமைச்சிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் கிடைக்கபெறுபவை ஆகும்.

கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தொற்று கண்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

May be an image of 2 people, people standing and indoor

இதனைத் தொடர்ந்து தொற்று கண்டிராதவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை கட்டம் கட்டமாக இன்று தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட மெந்தாரி கோர்ட் அடுக்ககப் பகுதியில் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என கடந்த வியாழன் அன்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜோஹாரி அனுவார் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த நடவடிக்கை இன்று முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மெந்தாரி கோர்ட் அடுக்ககத்தில் 3,469 வீடுகள் இருப்பதாகவும் ஏறத்தாழ 17,000க்கும் மேற்பட்டக் குடியிருப்பாளர்கள் இங்கு வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவ்வெண்ணிக்கையில் 60 விழுக்காட்டினர் மலேசியர்கள் எனவும் எஞ்சிய 40 விடுக்காட்டினர் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more