Homeமலேசியா2025இல் முழுமையான மின்னியல் அடையாள ஆவண முறை !

2025இல் முழுமையான மின்னியல் அடையாள ஆவண முறை !

கோலாலம்பூர் | 5/7/2021

2025 ஆண்டில் கூடுதல் மின்னியல் பாதுகாப்பு கூறுகளுடன் தேசிய அடையாள ஆவண முறையை தேசியப் பதிவகம் செயல்படுத்தவிருக்கிறது. அதற்கானத் தனி மன்றத்தை அது அமைத்துள்ளது.

அமைக்கப்பட்ட அந்தப் புதிய மன்றம் தேசிய பதிவு சட்ட திட்டங்கள் (1990) குறித்த கொள்கைகளையும் மாற்றங்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் என தொடர்பு – பல்லூடக அமைச்சு தெரிவித்தது.

தேசிய மின்னியல் அடையாள ஆவணம் முறை தொடர்பான கருவிகளையும் அமைப்புத் தளங்களையும் மேம்படுத்தும் பணிகளில் தேசியப் பதிவகம் தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது.

தேசிய மின்னியல் அடையாள ஆவணா முறைக்குத் தேவையான மனிதவள ஆற்றலை ஏற்படுத்தும் பொறுப்பையும் தேசியப் பதிவகம் ஏற்றுள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் நாள் MyDigital பெருந்திட்டம் குறித்த பிரதமரின் உரையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முழுமையான தேசிய மின்னியல் அடையாள ஆவண முறையை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கும் எனக் கூறியிருந்தார்.

இவ்விவகாரம் குறித்து தொடர்பு – பல்லூடக அமைச்சு மேலும் தெரிவிக்கயில், மைகாட்டிற்கு மாற்றாக அது அமையாது எனக் குறிப்பிட்டது.

அறிமுகம் காணவிருக்கும் புதிய தேசிய மின்னியல் அடையாள ஆவண முறையில் ஒரு குடிமகன்/மகள் தங்களின் உயிரியளவியல் கூறுகளைக் கொண்டு அடையாள விவரங்களை பல்வகையில் உறுதிப்படுத்தும் முறையைக் கொண்டிருக்கும்.

இதனால், ஒரு தனி நபரின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் திருடப்படுவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு கொண்டிருக்கும்.

சுருங்கக்கூறின், இயங்கலையில் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கும் போலி கணக்குகள் / அடையாளங்கள் உலா வருவதைக்  குறைப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய மின்னியல் அடையாள ஆவண முறையில் பத்து விரல்களில் உள்ள ரேகைகள், கண் விழி, முகம் போன்றவைகள் அடையாளம் காணும்.

spot_img

latest articles

explore more