கோலாலம்பூர் | 7/7/2021 :-
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கட்ட மருத்துவர்கள் பணி குறித்து அண்மையில் மருத்துவர்களாலும் மலேசிய மருத்துவர் சங்கமும் குரல் கொடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கட்ட மருத்துவர்களுக்கு அவ்வொப்பந்தம் நீட்டிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 5/12/2021 முதல் 4/12/2022 வரையில் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அவ்வமைச்சு தெரிவித்ததாக அம்லேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
UD43 நிலையில் உள்ள மருத்துவர்களுக்கு இந்த ஒப்பந்த நீட்டிப்பு ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.
இருப்பினும், இலாகா தலைவர்கள் ஒப்பந்த நீட்டிக்கப்பட்ட மருத்துவர்களை தடுப்பூசி மையங்களில் பணியமர்த்த முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
நீட்டிக்கப்படும் ஒப்பந்தம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டது எனவும் அவ்வப்போது மாற்றம் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சி மருத்துவர்கள் பணியமர்த்தம் தள்ளிப் போன போது 2016 ஆண்டு இந்த ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர் பணியமர்த்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த ஒப்பந்த டிப்படையில், முதலில் 3 ஆண்டுகளும் பின்னர் நீட்டிப்பாக 2 ஆண்டுகளுமாக, மொத்தம் 5 ஆண்டுகள் முடிவு செய்யப்பட்டது.
இது வரையில் 23,007 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள வேளையில், அவர்களில் 789 மருத்துவர்கள் அரசுத்துறையில் நிரந்தரப் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் கருப்புக் குறியீடு – கருப்பு திங்கள் பரப்புரை (12/7/2021) அரசு இந்த முடிவு எடுப்பதற்கு ஒரு முக்கியப் பங்காக இருக்கலாம் என மலேசிய மருத்துவச் சங்கத்தைச் சார்ந்த வட்டாரம் குறிப்பிடுகிறது.
இந்த முறை முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டமிடல் முன்னெடுக்கப்படவில்லை என்பது அறீந்த ஒன்று தான்.
பெரும்பான்மை மருத்துவர்களின் ஒப்பந்தம் இவ்வாண்டு முடிவடைகின்ற நிலையில், மேலும் ஓராண்டமது சுகாதார அமைச்சால் நீட்டிக்கப்படுகிறது.
இருந்த போதிலும், தற்பொழுது வழங்கப்படுகிற ஓராண்டு ஒப்பந்த நீட்டிப்பு முழு தீர்வாகாது.
நோயாளியின் நோய்க்குக் காரணத்தை அறியாமல் சிகிச்சை அளீப்பது போல் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர் பணியமர்த்த விவகாரத்தை அரசு கையாளும்போது நீண்டகால நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும் என மலேசிய மருத்துவச் சங்கம் பல முறை வலியுறுத்தி வந்துள்ளது.
ஒப்பந்த நீட்டிப்பு நல்ல முடிவாக இருந்தாலும் ஓராண்டு காலம் அவகாசம் என்பது பொருத்தமற்ற ஒன்று என அது தெரிவித்தது.


