Homeமலேசியாசிரம்பான் பிகேபிடி: உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமானதாக உள்ளது ! – உள்நாட்டு வாணிபம் -...

சிரம்பான் பிகேபிடி: உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமானதாக உள்ளது ! – உள்நாட்டு வாணிபம் – பயனீட்டாளர் அமைச்சு

சிரம்பான் | 8/7/2021 :-

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள சிரம்பான் மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாது என உள்நாட்டு வாணிபம் – பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.

அமைச்சின் தலைமை இயக்குநர் அயின் அர்ஜுனா அஸிஸ் ஸமான் இது குறித்து தெரிவிக்கயில், அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிப்பு செய்து வருவதாகவும் அப்போது பொருட்களின் விலையையும் கண்காணிக்கப்பதாகவும் அவர் கூறினார்,

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது தொடர்ந்து 3,010 பலசரக்கு – மளிகைக் கடைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்று 33 மொத்த விற்பனைக் கடைகளையும் அவ்வமைச்சின் அதிகாரிகள் கண்காணித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேவைப்படும் அளவிற்கே பொது மக்கள் பொருட்களை வாங்கவேண்டும் எனவும் அளவுக்கு அதிகமானப் பொருட்களை வாங்க வேண்டாம் என அவர் மேலும் கூறினார்.

முடிந்தவரை நேரடி நடமாட்டத்தைக் குறைத்து இணையம்வழி பொருட்களை வாங்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more