கோலாலம்பூர் | 9/7/2021 :-
பெருந்தொற்றுக் காலத்தில் பொது – தானியார் பல்கலைக்கழகத்தின் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நம்பிக்கைக் கூட்டணியின் கல்வி செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் செலுத்த வேண்டியக் கட்டணத்தைக் குறைப்பதற்காகப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நேரடியாக வழங்குவதோடு சேர்த்து நேரடியாகவே மாணவர்களுக்கு வழங்கப் பரிந்துரைத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் கற்றம் கற்பித்தல் சீராக நடைபெற 20 பொதுப் பல்கலைக்கழகங்களின் வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கு சிறப்பு மானியம் வழங்கப்பட்டது.,
அதே வேளையில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அதன் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் சீராக ந்டைபெற உதவ வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணியின் கல்வி செயற்குழு கேட்டுக் கொண்டது.
எனவே, பி40, எம்40 குடும்பங்களைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டணக் கழிவை வழங்குமாறு அச்செயற்குழு பரிந்துரைத்துள்ளது.
அதே வேளையில், இக்கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் அச்செயற்குழு கூறியுள்ளது.
அவ்வாறு குறிப்பிடப்பட்டக் கூட்டு அறிக்கையில் நம்பிக்கைக் கூட்டணியின் கல்வி செயற்குழுவின் தலைவர் டாக்டர் மாஸ்லி மாலிக்கோடு
- செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமாட்
- கூலாய் சட்டமன்ற உறுப்பினர் தியோ நீ சிங
- செக்கிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில்
- புக்கிட் மெர்த்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிம்
- தங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ருஸ்னா அலுயாய்
ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டிருந்தனர்.
பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி முறை தடுங்கலுக்கு உட்படாமல் தொடர்ந்து நடைபெற அரசாங்கம் சரியான முறைகளைக் கையாள வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


