Homeமலேசியாஅதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 1)

அதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 1)

கோலாலம்பூர் | 11/7/2021 :-

கடுமையாக்கப்பட்ட நடமாக்கப்பட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கோவிட்-19 நேர்வுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் மிக நெருக்கடியானச் சூழலைச் சந்தித்துள்ளன.

இதனால் கட்டிகளின் எண்ணிக்கையும் உயிர்வளி விநியோகிப்பும் குறைபாடு ஏற்பட்டு வருகிறது. அத்தகையச் சூழல் கோவிட்-19 பெருந்தொற்று சிகிச்சைக்கு முட்டுக்கட்டையாகவும் முன்களப் பணியாளர்களின் உற்சாகக் குறைபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

சில மேம்பாடுகள் அவ்வப்போது செய்து வந்தாலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதில் நேரடியாக ஈடுபடும் நான்கு முக்கியப் பொது மருத்துவமனைகளின் முன்களப் பணியாளர்களின் எதிர்ப்பார்ப்பு சற்றே குறைந்து வருகிறது.

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் என்பதால் தங்களைப் பற்றிய அடையாளம் வெளியிடப்படக் கூடாது எனும் நிபந்தனைப்படி முன்களப் பணியாளர்களின் தற்போதைய கசப்பானச் சூழ்நிலை குறித்து பொது மக்களுக்குத் தெரிவிக்கின்றனர்.

தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனை, கிள்ளான்

ஆங்கில – பேரழிவு திரைப்படம் போல் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவும் வார்டும் மிகவும் நெருக்கடியான – மோசமான நிலையில் உள்ளன. கிளினிக் மூடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையை எதிர்கொள்வது மிகுந்த சிரமமாக உள்ளது.

கோவிட்-19 நேர்வுகள் எதிர்வரும் சில வாரங்களுக்கு மிக அதிகமாக இருக்கும் எனவும் அதனைக் கையாள கட்டில்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், மருத்துவமனையின் நிர்வாகம் போதிய வசதிகளை முன்னேற்பாடுகள் செய்யவில்லை. இறுதியில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியில் கன்வஸ் கட்டில்கள் போடப்பட்டது ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வந்தது.

இங்கு கட்டில்கள், சுவாச உதவிக் கருவிகள் போதவில்லை. உயிர்வளி விநியோகிப்பும் தட்டுப்பாட்டை எட்டியுள்ளது. இங்கு கோவிட்-19 நோயாளிகள் மிக அதிகம். அவர்கள் இறப்பதில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் ஆனால், வசதிகள் மிகக் குறைவான நிலையில் உள்ளன.

கடந்த சில நாட்களாக 24 மணி நேர நோட்டிஸ் கொடுத்து சில மருத்துவர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர். கடுமையாக உழைக்க அவர்கள் முன்வந்து பதவி ஏற்றிருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்றால் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

தற்போது ஆயுதப்படையின் உதவி கிடைத்ததற்குப் பெரும் நன்றியைத் தெரிவித்த முன்களப் பணியாளர்கள் அவ்வுதவியை முன்னரே செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இம்மருத்துவமனைக்கு வேற்று மாநிலங்களில் இருந்தும் மற்றப் பிரிவுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டாலும் அவ்வெண்ணிக்கை போதவில்லை. ஆகையால், கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பகுதிகள் தற்போது முடப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையின் மற்றப் பிரிவுகளில் உள்ள தாதியர்களும் பணியாளர்களும் கோவிட்-19 நோயாளிகள் பிரிவில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

முன்களப் பணியாளர்களின் உத்வேகம் மிகக் குறைவாக உள்ளது.எங்கள் மீது பரிவு இல்லை. சோர்வும் கோபமும் தான் எங்கள் வசம் இப்போது உள்ளது.

அரசுப் பொது மருத்துவமனை தற்போது பல குறைபாட்டை சந்தித்துள்ளன. ஆள்பலமும் நிதியும் பற்றாக்குறையாகியுள்ளது.

*இன்னும் சில மருத்துவமனைகள் குறித்த நிலவரத்தை அடுத்தப் பகுதியில் காண்போம்.

பகுதி 2 :- http://www.anegun.com/?p=48279

spot_img

latest articles

explore more