புத்ரா ஜெயா, செப்.13-
தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன், தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரும் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் பிரதமர்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மலர் நாளிதழின் அலுவலகமும் அதன் உரிமையாளரும் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியதோடு கண்டனங்களை தெரிவிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அவர்களுடன் சுங்கை சட்டமன்ற உறுபினர் சிவநேசன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் சரவணனுக்கு எதிரான இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, டத்தோ சரவணனுக்கு எதிராக பிரதமர்துறை அலுவலகத்தின் அதிகாரியிடம் மகஜரை அவர்கள் வழங்கினர்.