வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஜோகூர் மாநில இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜோகூர் மாநில இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

ஜோகூர் செப் 13-

இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தினர்கள் நமது சமுதாய இளைஞர்களிடத்தில் தலைமைத்துவ பண்பை விதைக்கும் உன்னத பணியை கிள்ளான் வட்டாரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தின் ஜோகூர் கிளை தனது பணியாக தலைமைத்துவ பயிற்சி முகாமினை அரங்கேற்றியுள்ளார்கள்.

உலுதிராமில் நடைபெற்ற இந்த முகாமில் படிவம் 4 யை சார்ந்த 121 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 4 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தலைமைத்துவ பண்பும் சார்ந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம் சமுதாயத்தில் தலை சிறந்த தலைவர்களை உருவாக்குவது ஆகும். அதனை மையப்படுத்தியே இந்திய ஆத்ம சக்தி இயக்கம் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் ம.வசந்தகுமார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த முகாமின் முக்கிய அம்சமாக தலைமைத்துவ பண்பை உணர்த்துதல், தன்னம்பிக்கையை அதிகரித்தல், தங்களுக்கான இலக்கை தேர்வு செய்தல், சமுதாய ஈடுபாட்டை அதிகரித்தல் ஆகியவை சார்ந்து முகாம் களை கட்டியது. பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர் கொண்ட குழு இந்த முகாமினை வழி நடத்தி வெற்றியடைய செய்தார்கள். இந்த முகாமின் வெற்றிக்கு தனிஷ், அர்வின், கார்த்தி ஆகியோர் மிக முக்கியமாக முதுகெலும்பாக இருந்து செயல்பட்டார்கள்.

இதே வேளையில் ஜோகூர் மாநில அரசாங்கம் மற்றும் ஜோகூர் மாநில கல்வி இலாகாவைச்சார்ந்த திருமதி புஷ்பலாதா ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக் கின்றேன். மாண்புமிகு ரவீண் அவர்கள் இந்த முகாமிற்கு சிறப்பு வருகை புரிந்ததோடு பண உதவியும் புரிந்தார். மேலும் இது மாதிரியான பல நடவடிக்கைகளை ஜோகூர் மாநிலத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்திய ஆத்ம சக்தியை பொறுத்தவரையில் மாணவர்களை தலைசிறந்த தலைவர்களாக உருவாக்கி சமுதாயத்தை காக்க வேண்டுமென்பதனை தலையாய கடமையாக கொண்டிருக்கிறது என ம.வசந்த குமார் தனதுரையில் தெளிவுப்படுத்தினார். 4 நாள் முகாம் சீரும் சிறப்புமாக மாணவர்களின் வற்றாத ஆதரவோடும், அவர்களின் உற்சாகத்தோடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன