Homeமலேசியாயூகேஎம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது !

யூகேஎம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது !

பாங்கி | 20/7/2021 :-

மலேசியத் தேசியப் பல்கலைக்கழக துவான்கு முஹ்ரிஸ் சேன்சலர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனையின் நிற்வாகம் தெரிவிக்கயில், சுகாதார அமைச்சு மிக அண்மையில் வெளியிட்டுள்ள புதிய நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை (எஸ்.ஓ.பி.)யை வேலையிடத்திலும் மற்ற இடங்களிலும் பின்பற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்கலைக்கழக மருத்துவமனையின் பணியாளர்களிடையே கோவிட்-19 பரவல் விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு அவ்வப்போது கண்காணிப்பும் செய்யப்படுவதாக அது கூறியது.

தனிநபர் பாதுகாப்புக் கவச உடை உட்பட பல்வேறு எஸ்.ஓ.பி.யை அந்த அறுவை சிகிச்சைப் பிரிவில் முறையாகக் கடைபிடிக்கப்பட வில்லை எனும் தகவல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ள நிலையில் அது உண்மையில்லை என மலேசியத் தேசியப் பல்கலைக்கழக துவான்கு முஹ்ரிஸ் சேன்சலர் மருத்துவமனை கூறியுள்ளது.

spot_img

latest articles

explore more