Homeமலேசியாதடுப்பூசிக்காக உணவு விநியோகிப்பாளர்கள், E-Hailing ஓட்டுநர்கள் பெயர்ப்பட்டியல் சேகரிக்கப்படும் ! – அமைச்சர் வீ கா...

தடுப்பூசிக்காக உணவு விநியோகிப்பாளர்கள், E-Hailing ஓட்டுநர்கள் பெயர்ப்பட்டியல் சேகரிக்கப்படும் ! – அமைச்சர் வீ கா சியோங்

கோலாலம்பூர் | 21/7/2021 :-

தடுப்பூசிக்காக உணவு விநியோகிப்பாளர்கள், E-Hailing ஓட்டுநர்கள் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்க போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு ஆணையிடபட்டுள்ளது அதன் அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களின் ஒரு பகுதியினராக விளங்கும் அவர்களுக்குக் தடுப்பூசி வழங்கப்படுவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்வழி ஓட்டுநர்கள், பயணார்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து நேற்று Grab நிறுவனத்தினருடன் இயங்கலை வாயிலாக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்நிறுவனத்தில் உணவு விநியோகிப்பாளர்கள் 50,000 பேரும்  E-Hailing ஓட்டுநர்கள் 100,000 பேரும் இருப்பதாக அமைச்சர் சொன்னார்.

Register as a Grab Driver today | Grab MY

இவர்களுக்கானத் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கைத் தொடங்கப்பட்டுள்ள நிலையில்  முதற்கட்டமாக 41,488 E-Hailing – வடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் 11,527 உணவு விநியோகிப்பாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருந்த போதும் போக்குவரத்துத் துறை தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையைத் தாம் புரிந்து கொண்டதாகவும் பொருட்கள் அனுப்பப்படுவதும் அவசியத் தேவைகளுக்கு மக்கள் பயனிப்பதற்கும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது முக்கியம் என அமைச்சர் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசி செயற்குழு CITF போன்ற அமைப்பின் ஒத்துழைப்பால் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more