கோலாலம்பூர் | 23/7/2021 :-
தடுப்பூசி செலுத்தும்போது அதனைக் காணொலியாகப் பதிவு செய்யலாம் என தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
இன்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபாவுடன் இணைந்து இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழுவின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவர் அந்தச் சந்திப்பின்போது தெரிவித்த முக்கியச் சாரம் :
1. அடுத்த மாதம் 1ஆம் தேதிக்குள் அனைத்து கில்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட இலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது அதனைக் காணொலியாகப் பதிவு செய்யலாம். தடுப்பூசியைச் செலுத்தும் தாதியர் அதனை செலுத்திக் கொள்கிறவரிடம் காண்பிக்க வேண்டும்.
3. காலித் தாடுப்பூசி விவகாரம் : பக்க விளைவுகள் இல்லாததால் சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.
4. காலித் தடுப்பூசி செலுத்தியதை தாதியர் ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு எச்சரிக்கையும் ஒ௳உங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
5. தனியார் தடுப்பூசி விற்பது குறித்தும் அதன் சில்லறை விலை குறித்தும் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்.
6. இது வரையில் 2 தடுப்பூசிகள் பெற்றதற்கான நேரடிச் சான்றிதழ் கிடையாது.
அதே வேளையில் , சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா செய்தியாளர் சந்திப்பில் பேசிய கருத்துகளின் சாரம் :
1. கோவிட்-19 சுய பரிசோதனை கருவி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுக் கிடைக்கப்பெற்ற எந்த முடிவையும் மைசெஜாத்தெரா செயலி வாயிலாக சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டும்.


