கோலாலம்பூர் | 25/7/2021 :-
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியத்தால் தோல்வி கண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா, தொடர்புடைய அமைச்சர்கள் ஆகியோர் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆரவலர்களும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ததிலும், தற்போதைய சட்டங்களின் அடிப்படையிலும் குற்றவியல் பிரிவு 269இன் படியும் 304Aஇன் படியும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பொறுப்பு வகிக்கும் சுகாதார அமைச்சர் உட்பட தொடர்புடைய இதர அமைச்சர்கள் மீது காவல் துறை விசாரனை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு காவல்துறை புகார் அளித்துள்ளனர்.
அமைச்சராகத் தமது பணியைச் செய்வதில் அலட்சிக் குற்றம் புரிந்ததுள்ளதாகவும் அதன் விளைவாக சமூகத்தில் கோவிட்-19 பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், பல உயிர்கள் பலியாகியுள்ளன எனக் குறிப்பிட்டு இன்று காலை கோலாலம்பூர் பந்தாய் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை புகாரளித்துள்ளவர்கள் பட்டியல் :
1. அஸிஸ் ஜம்மான் (செப்பாங்கார்)
2. ஃபாஹ்மி ஃபாட்ஸில் (லெம்பா பந்தாய்)
3. கெல்வின் யீ (பண்டார் கூச்சிங்)
4. சார்லஸ் சந்தியாகோ (கிள்ளான்)
5. ஹன்னா இயோ (சிகாம்பூட்)
6. மஎஇயா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா)
7. இஸ்னாரைசா முனிரா மஜ்ஜிலிஸ் (கோத்தா பெலுட்)
இவர்களுடன் சில சமூக ஆரவலர்களும் அதே விவகாரங்களைக் குறிப்பிட்டு காவல்துறை புகார் அளித்துள்ளனர்.
1. அம்பிகா சீனிவாசன்
2. மரினா மகாதீர்
குற்றவியல் தடுப்புச் சட்டம் பிரிவு 269 : அலட்சியத்தால் உயிர்க்கொல்லி நோய் பரவக் காரணமாகுதல்
குற்றவியல் தடுப்புச் சட்டம் பிரிவு 304A :அலட்சியத்தால் இறப்புக்குக் காரணமாகுதல்
அப்புகாரில் முன்வைக்கப்பட்டக் குற்றாச்சாட்டுகள் :
1. கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் போதவில்லை.
2. தொற்று கண்டவருடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களைக் கண்டறிவதில் தோல்வி
3. மாநில அரசுக்குத் தேவையான விரிவானத் தரவுகள் கொடுக்கப்படவில்லை.
4. கடந்த ஆண்டு சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு தீபகற்பாம் திரும்பியவர்களைக் கட்டாயத் தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வைப்பதில் தோல்வி
5. தரவுகள் – அறிவியல் அடிப்படையில் முறையான எஸ்.ஓ.பி.யை வரையறுப்பதில் தோல்வி
6. முன்கூட்டியே தடுப்பூசியைத் தருவிப்பதில் தோல்வி
எனவே, அரசு இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இது மலேசிய மக்களின் உயிர் சம்பந்தப்பட்டப் பிரச்சனையாகும்.
கோவிட்-19 பெருந்தொற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தவில்லை என்பதை அவர்கள் (அரசாங்கம்) உணர வேண்டும். அதற்காகவே இந்தக் காவல்துறை புகார் செய்யப்பட்டது என அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.
சமூகத்தின் பெரும்புள்ளிகள் எஸ்.ஓ.பி. விதி மீறல் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஒரு தலை பட்சமாக உள்ளது என ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
சபா மாநிலம் தடுப்பூசிகளை மிகக் குறைவான அளவில் பெற்ற மாநிலங்களில் ஒன்று என அஸிஸ் தெரிவித்தார். அம்மாநில நிலபரப்பு மிகவும் பெரியது எனவும் நாட்டில் ஒட்டுமொத்த கோவிட்-29 நேர்வுகள் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் எனவும் அவர் சொன்னார்.
காவல்துறையில் அளிக்கப்பட்ட அந்தப் புகார் முனைமுகப் பணியாளர்கள் மீது அல்ல எனவும் அப்புகார் அரசாங்கத்தை இயக்குகின்ற பொறுப்பில் இஉர்க்கின்றவர்களை நோக்கியது என ஹன்னா இயோ தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரம் குறித்து காவல்துறை விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.


