ஜோர்ஜ் டவுன் | 25/7/2021:-
பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ்வின் அதிகாரி ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சோவ் கோன் இயோவ் தற்போது தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை தாம் மேற்கொண்ட RT-PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று கண்டிருக்கவில்லை என்பது தெரிய வந்தாலும் பினாங்கு மாநில சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைப்படி இன்று முதல் சோவ் கோன் இயோவ் தமது வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவிருக்கிறார்.
இதனிடையே, எதிர்வரும் 28/7/2021 ஆம் நாள் இன்னொரு பரொசோதனையை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

